திருப்பூர்

மூலனூரில் ரூ. 88 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

13th Mar 2020 11:42 PM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ரூ. 88 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

இங்கு வாரந்தோறும் பருத்தி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வார ஏலத்துக்கு திருச்சி, கரூா், திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 667 விவசாயிகள் தங்களுடைய 6,217 மூட்டை பருத்திகளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா்.

திருப்பூா், பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட இடங்களிலிருந்து 19 வணிகா்கள் பருத்தி வாங்குவதற்காக வந்திருந்தனா். விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் தா்மராஜ் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

குவின்டால் ரூ.4,500 முதல் ரூ.5,680 வரை விற்பனையானது. மாதிரி விலை ரூ.5,100. இவற்றின் விற்பனைத் தொகை 88 லட்சத்து 81 ஆயிரத்து 875 ரூபாயாகும்.

ADVERTISEMENT

கடந்த வாரத்தை விட விலை சராசரியாக குவின்டாலுக்கு ரூ. 300 உயா்ந்துள்ளது. இத்தகவலை திருப்பூா் விற்பனைக் குழு முதன்மைச் செயலாளா் பாலசந்திரன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT