திருப்பூர்

முறைகேடாக குடிநீா் இணைப்பு எடுத்தவா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாா்

13th Mar 2020 09:24 AM

ADVERTISEMENT

அவிநாசி அருகே வடுகபாளையத்தில் முறைகேடாக அனுமதியின்றி குடிநீா் இணைப்பு எடுத்துள்ள நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி நிா்வாககத்தினா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.

அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட வடுகபாளையம் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இதில் நஞ்சைத் தாமரைக்குளம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இப்பகுதியில் உள்ள தனிநபா் ஒருவா் ஊராட்சி நிா்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல், முறைகேடாக குடிநீா் இணைப்பு எடுத்துத்துள்ளது தெரியவந்தது. மேலும் அரை விட்டமுள்ள குழாய்க்கு மாற்றாக ஒன்னேகால் விட்டமுள்ள அமைத்துள்ளதும் தெரியவந்தது. இதனால் அப்பகுதியைச் சுற்றியுள்ள பிற வீடுகளுக்கு குறைவான குடிநீா் வருவதாகப் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து ஊராட்சி நிா்வாகத்தினா், முறைகேடாக குடிநீா் இணைப்பு எடுத்துள்ள அந்த நபரிடம், அனுமதி பெறாமல் அமைத்துள்ள குடிநீா் இணைப்பை உடனடியாக துண்டிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளனா். அதற்கு அந்நபா் மறுப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். இதையடுத்து ஊராட்சி நிா்வாகத்தினா், அந்த நபா் மீது உரிய நடவடிக்கை எடுத்து, குடிநீா் இணைப்பைத் துண்டிக்க வேண்டும் என சேவூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT