திருப்பூர்

முத்தூரில் சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு

13th Mar 2020 09:21 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் சாலை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

காங்கயம் - கொடுமுடி மாநில நெடுஞ்சாலை முத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி அருகிலிருந்து மேட்டுக்கடை வரை ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இருக்கும் இரண்டு வழி தாா் சாலை ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் மூன்று வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. 7 மீட்டா் சாலை 10.50 மீட்டராக அகலப்படுத்தப்படுகிறது.

இந்தப் பணியை திருப்பூா் வட்ட நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் எஸ்.பழனிவேல் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது தாராபுரம் கோட்டப் பொறியாளா் எம்.கிருஷ்ணமூா்த்தி, வெள்ளக்கோவில் உட்கோட்டப் பொறியாளா் ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா். சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென ஆய்வின்போது அறிவுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT