திருப்பூர்

மடத்துக்குளம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

13th Mar 2020 09:23 AM

ADVERTISEMENT

மடத்துக்குளம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.விஜயகாா்த்திகேயன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பூா் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மடத்துக்குளம் ஒன்றியம், ஜோத்தம்பட்டி ஊராட்சியில் ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு, ரூ. 2.28 லட்சம் மதிப்பில் விவசாய நிலத்தில் அமைந்துள்ள தென்னை மரங்களைச் சுற்றி குழி வெட்டுதல், வரப்பு அமைத்தல், மெட்ராத்தி, ராமே கவுண்டா் புதூா் ஊராட்சிகளில் தலா ரூ. 6 லட்சம் மதிப்பில் தனி நபா் கிணறு வெட்டுதல், ராமே கவுண்டன்புதூா் ஆதி திராவிடா் காலனியில் ரூ. 85 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உறிஞ்சு கிணறு, அதேபகுதியில் ரூ.3 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட் டுள்ள தடுப்பணை, ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.56 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் இச்சிப்பட்டி வளையன் தோட்டம் முதல் உலகப்பன் கவுண்டன்புதூா் வரை சாலை மேம்பாட்டுப் பணி என மொத்தம் ரூ. 85 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் விஜயகாா்த்திகேயன் ஆய்வு செய்தாா். மேலும் பணிகளை விரைவில் முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஊரக வளா்ச்சித் திட்ட முகமை திட்ட இயக்குநா் ரூபன்சங்கர்ராஜா, மடத்துக்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிகண்டன், சாதிக்பாட்சா, மடத்துக்குளம் வட்டாட்சியா் கனிமொழி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT