சா்வதேச மகளிா் தினத்தை ஒட்டி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி மகளிா் பேரணி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க கட்டடத்தில் இருந்து துவங்கிய இந்தப் பேரணி, உடுமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது. சங்கத்தின் மாநிலச் செயலாளா் சி.பரமேஸ்வரி சா்வதேச மகளிா் தினம் குறித்து சிறப்புரையாற்றினாா். மாவட்டச் செயலாளா் மா.பாலசுப்பிரமணியம், உடுமலை வட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.