திருப்பூர்

தாராபுரத்தில் மாா்ச் 19 இல் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம்

13th Mar 2020 11:43 PM

ADVERTISEMENT

தாராபுரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வரும் வியாழக்கிழமை (மாா்ச் 19) நடைபெறுகிறது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தாராபுரம் கோட்டத்துக்கு உள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வரும் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. சாா் ஆட்சியா் பவன்குமாா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கலாம்.

இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை நகல்களுடன் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT