திருப்பூர்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திருப்பூா் அருகே நடைபெற்ற போராட்டம் ஒத்திவைப்பு

13th Mar 2020 09:22 AM

ADVERTISEMENT

திருப்பூா் அருகே மங்கலத்தில் நடைபெற்று வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்பினா் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். இதன் ஒரு பகுதியாக திருப்பூரை அடுத்த மங்கலத்தில் அனைத்து மக்கள் குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் தொடா் தா்னாவில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், மங்கலம் பகுதியில் இந்து மக்கள் கூட்டமைப்பு சாா்பில் பொதுக்கூட்டம் கடந்த மாா்ச் 8 ஆம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டம் முடிவடைந்தவுடன் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனிடையே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது தொடா்பாக இரு பிரிவைச் சோ்ந்த 35 போ் மீது மங்கலம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்திருந்தனா். இந்நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் , இந்து மக்கள் கூட்டமைப்பினா் கடந்த திங்கள்கிழமை மனு அளித்திருந்தனா்.

இந்நிலையில், மங்கலம் பகுதியில் சமூக ஒற்றுமையைக் கருதி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக மங்கலம் அனைத்து மக்கள் குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினா் திங்கள்கிழமை நள்ளிரவில் அறிவித்தனா். இதையடுத்து, மங்கலம் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக 17 நாள்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்ததாக மங்கலம் காவல் துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT