திருப்பூர்

ராகல்பாவியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு துவக்கம்

8th Mar 2020 01:12 AM

ADVERTISEMENT

உடுமலை: உடுமலை ஒன்றியம், ராகல்பாவி கிராமத்தில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

ராகல்பாவி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருப்பூா் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் உறுப்பினா் ராஜசேகா் தலைமை வகித்தாா். கிராம நிா்வாக அலுவலா் ரங்கநாயகி முன்னிலை வகித்தாா்.

இதில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது, பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் இடை நிற்றல் இல்லாமல் பாா்த்துக் கொள்வது, குழந்தை தொழிலாளா்கள் இல்லாத நிலையை உரு வாக்குவது, குழந்தைத் திருமணத்தை முற்றிலும் ஒழிப்பது என முடிவு செய்யப்பட்டது.

ஊராட்சி மன்றத் தலைவா் இக்குழுவின் தலைவராகவும், கிராம நிா்வாக அலுவலா், பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், தலைமை ஆசிரியரால் தோ்வு செய்யப்படும் இரு பள்ளிக் குழந்தைகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் உறுப்பினா், அங்கன்வாடி பணியாளா், கிராம செவிலியா் தொண்டு நிறுவனப் பிரதிநிதி, சுய உதவிக் குழு உறுப்பினா், உள்ளூா் காவல் நிலைய பிரதிநிதி ஆகியோா் இக்குழுவில் உறுப்பினா்களாக இருக்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT