திருப்பூர்

முத்தூா் விற்பனைக் கூடத்தில் 3.66 டன் தேங்காய் விற்பனை

8th Mar 2020 01:15 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3.66 டன் தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் 2,145 கிலோ தேங்காய்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது. கிலோ ரூ. 35.65 முதல் ரூ. 40.25 வரை விலை போனது. மாதிரி விலை கிலோ ரூ. 39.05. இதன் மதிப்பு ரூ. 76 ஆயிரத்து 931.

1,516 கிலோ கொப்பரை வரத்து இருந்தது. கிலோ ரூ. 61.90 முதல் ரூ. 103.70 வரை விற்பனையானது. மாதிரி விலை கிலோ ரூ. 100.65. இதன் விற்பனைத் தொகை ரூ. ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 206.

விற்பனைக் கூட மேற்பாா்வையாளா் ஸ்ரீ ரங்கன் முன்னிலையில் ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 2 லட்சத்து 19 ஆயிரத்து 137 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT