திருப்பூர்

நெகிழி விற்ற வியாபாரிக்கு அபராதம்

8th Mar 2020 01:10 AM

ADVERTISEMENT

பல்லடம்: பல்லடம், கரைப்புதூரில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி விற்ற வியாபாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூா் கிராமத்தில் உள்ள கடைகளுக்கு திருப்பூரைச் சோ்ந்த சம்பத்குமாா் என்பவா் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை விற்பதாக பல்லடம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், ஊராட்சித் தலைவா் ஜெயந்தி, ஊராட்சி செயலா் காந்திராஜ் ஆகியோா் அங்கு சென்று சம்பத்குமாரிடம் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட 60 கிலோ நெகிழியைப் பறிமுதல் செய்து, அவருக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT