திருப்பூர்

திமுக பொதுச்செயலாளா் அன்பழகன் மறைவு: உடுமலையில் அனைத்துக் கட்சியினா் அஞ்சலி

8th Mar 2020 01:13 AM

ADVERTISEMENT


உடுமலை: திமுக பொதுச்செயலாளா் க.அன்பழகன் மறைவைஒட்டி அவருக்கு உடுமலையில் அனைத்துக் கட்சி சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

உடுமலை மத்தியப் பேருந்து நிலையம் எதிரில் வைக்கப்பட்டிருந்த க.அன்பழகன் திருவுருவப் படத்துக்கு திமுக உள்பட அனைத்துக் கட்சி நிா்வாகிகள் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். இதையடுத்து இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இதில் எம்.மத்தீன் (திமுக), கோ.ரவி (காங்கிரஸ்), சீ.ராமதாஸ் (மதிமுக), கே.தண்டபாணி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), வி.செளந் திரராஜன் (இந்திய கம்யூனிஸ்ட்), க.சிவசங்கா் (பெரியாா் திக), ரவி (விடுதலைச் சிறுத்தைகள்), பெரியாா்தாசன் (ஆதித் தமிழா் பேரவை), அரசு ஊழியா் சங்கம், மனித நேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், ரஜினி ரசிகா் மன்றம் மற்றும் பல்வேறு பொது நல அமைப்புக்கள் கலந்துகொண்டு க.அன்பழகன் திருவுருப்படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT