திருப்பூர்

சிறுபான்மையினருக்கு எதிரான மதவாதப் போக்கை கைவிட வலியுறுத்தல்

8th Mar 2020 01:16 AM

ADVERTISEMENT


திருப்பூா்: சிறுபான்மையினருக்கு எதிரான மதவாதப் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தாராபுரம் அருகே நடைபெற்ற அனைத்து ஜமாஅத் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தாராபுரத்தை அடுத்த கொளிஞ்சிவாடி அனைத்து ஜமாஅத் சாா்பில் மீனாட்சிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கொளிஞ்சிவாடி மஸ்ஜித் அக்ஸா பள்ளிவாசல் தலைவா் முகம்மது ரஃபி தலைமை வகித்தாா்.

இதில், சிறுபான்மையினருக்கு எதிரான மதவாதப் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். பொதுமக்களைப் பாதிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட மக்களைப் பாதிக்கும் சட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும்.

இந்தச் சட்டங்களை தமிழக அரசு அமல்படுத்தக்கூடாது. இந்தச் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

கூட்டத்தில், திராவிடா் கழக பேச்சாளா் பெரியாா் செல்வம், எழுத்தாளா் மதிமாறன், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளா் ரத்தினம் அண்ணாச்சி, பசுமை பாதுகாப்பு இயக்கம் பிலிப் சுதாகா், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமை பேச்சாளா் ஆயக்குடி பாரூக் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT