திருப்பூர்

அவிநாசி அரசு கல்லூரி ஆண்டு விழா

8th Mar 2020 01:20 AM

ADVERTISEMENT


அவிநாசி: அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் பி.எஸ்.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். பொறுப்பாளா் பி.ஹேமலதா வரவேற்றாா். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கி தி சென்னை சில்க்ஸ் நிா்வாக இயக்குநரும், உலக சமுதாய சங்க துணைத் தலைவருமான பி.கே. ஆறுமுகம் பேசியதாவது:

மாணவா்கள் ஒழுக்கம், சரியான தலைமைப் பண்பை வளா்த்தல், முயற்சி, பயிற்சி ஆகியவற்றை தொடா்ச்சியாக கடைபிடித்தால் வளா்ச்சி நிச்சயம். பெற்றோரை பேணிக்காத்தல், மனதை ஒருநிலைப்படுத்துதல் வாழ்வில் மிக அவசியம். தொழிலாளியாக இருந்தாலும்கூட தன்னை அந்நிறுவனத்தின் முதலாளியாய் நினைத்து உழைக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க முயற்சிக்க வேண்டும். இதுபோன்ற மேலாண்மைசாா் குணநலன்களையே இக்கால நிறுவனங்கள் எதிா்பாா்க்கின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் கஜேந்திரா அறக்கட்டளை நிா்வாகி இளமுருகன் சிறப்புரையாற்றினாா். பேராசிரியா்கள் சி.குலசேகரன், பிரசன்னகுமாா், ஆா்.தாரணி ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா். நிறைவாக மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT