தாராபுரம் அருகே உள்ள ராமபட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.17.45 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறைகள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.
ராமபட்டிணத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 45 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் இடிந்து விழுந்தது.
இதையடுத்து, தாராபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.17.45 லட்சம் செலவில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன. இந்த புதிய வகுப்பறைகளை தாராபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் காளிமுத்து திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவா் சத்யபாமா, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பானுமதி கருணாகரன், கல்வி அதிகாரி சுப்பிரமணியம், அதிமுக நிா்வாகி சதாசிவம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.