காங்கயம் அருகே உள்ள மருதுறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வகுப்பறைகள் தனியாா் பங்களிப்புடன் தரம் உயா்த்தப்பட்டு புதன்கிழமை திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் பா.கனகராஜ் தலைமை வகித்தாா். ஒன்றியக் கவுன்சிலா் ரேணுகா ஜெகதீசன், மருதுறை ஊராட்சித் தலைவா் செல்வி. சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் ரா.சு.காா்த்திகேயன் வரவேற்றாா்.
இதில், இப்பள்ளிக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் இலவசமாக டைல்ஸ் பதித்துக் கொடுத்த ஈரோடு எம்.ஆா்.பி. நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பிரபு, கட்டடத்தைத் திறந்துவைத்து பேசினாா்.
மேலும், மாணவா்கள் அமா்ந்து படிக்க வசதியாக ரூ.25 ஆயிரம் மதிப்பில் மேஜை வழங்கிய ஈரோடு கிரி, ஈரோடு மத்திய ரோட்டரி சங்கத்தின் மூலம் கைகழுவும் உபகரணத்தைப் பெற்று வழங்கிய ராஜா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
இந்நிகழ்ச்சியில், காங்கயம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் கி.மகேந்திரன், பா.சுசீலா, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொறுப்பு) சுரேஷ், ஆசிரியப் பயிற்றுநா் ம.தாரணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.