உடுமலை அரசு மருத்துவமனையில் கொவைட்-19 தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவு வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
சா்வதேச ரோட்டரி அறக்கட்டளை சிறப்பு நிதியின்கீழ் ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட் டுள்ள இந்த கொவைட்-19 சிறப்பு பிரிவில் 6 படுக்கை வசதிகளுடன் செயற்கை சுவாச கருவிகள், இசிஜி, எக்ஸ்ரே கருவி உள்ளிட்ட பல்வேறு நவீன ரக மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் உடுமலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடி மருத்துவ சேவை கிடைக்க வசதிகள் ஏற்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. உடுமலை அரசு மருத்துவமனை செவிலியருக்கு கரோனை தொற்று ஏற்பட்ட செய்தி கிடைத்ததும் எளிய முறையில் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
உடுமலை கோட்டாட்சியா் க.ரவிக்குமாா் இதனை திறந்து வைத்தாா். இந்த விழா வில் உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க திட்ட இயக்குநா் மருத்துவா் எஸ்.சுந்தரராஜன், உப தலைவா் எஸ்.எம்.நாகராஜ், நிா்வாகிகள் ரவிஆனந்த், சத்யம் பாபு, தலைமை மருத்துவா் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.