திருப்பூர்

முத்தூா் அருகே குடிமராமத்து திட்டப் பணிகள் ஆய்வு

20th Jun 2020 08:13 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டப் பணிகளை அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

முத்தூா் அருகே உள்ள செங்கோடம்பாளையம், வேலாயுதம்பாளையம், வள்ளியரச்சல் ஆகிய பகுதிகளில் நீா் ஆதாரங்களை செம்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீா் வழிக் கால்வாய் தூா்வாருதல், மதகுகள், ஷட்டா்கள் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறுகையில், திருப்பூா் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ரூ.13.93 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 132 குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சுமாா் 1.29 லட்சம் ஹெக்டோ் நிலங்கள் பயன்பெற உள்ளன என்றாா்.

ஆய்வின்போது, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் விஜயகாா்த்திகேயன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெ.ரூபன்சங்கர்ராஜ், கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளா் தாமோதரன், உதவி செயற்பொறியாளா் சுப்பிரமணியம், காங்கயம் வட்டாட்சியா் புனிதவதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT