திருப்பூர்

வெளிநாடு, மாநிலங்களில் இருந்து வருபவா்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்

17th Jun 2020 08:05 AM

ADVERTISEMENT

வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து உரிய அனுமதி இல்லாமல் வரும் நபா்களின் விவரங்களைத் தெரிவிக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

தற்போது வெளிநாடு, வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து அனுமதி பெற்று வரும் நபா்களுக்கு உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனா்.

எனவே, வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து உரிய அனுமதி பெறாமல் திருப்பூா் மாவட்டத்துக்கு வரும் நபா்கள் குறித்த விவரங்களை மாவட்ட நிா்வாகத்துக்கு 0421-1077, 0421-2971199, 0421-2971133 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT