திருப்பூர்

மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை தோறும் பருத்தி ஏலம்

14th Jun 2020 08:37 AM

ADVERTISEMENT

மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஜூன் 18ஆம் தேதி முதல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பருத்தி ஏலம் நடைபெறவுள்ளது.

இது குறித்து ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டம், மூலனூா் பகுதியில் தற்போது பருத்திப் பருவம் தொடங்கியுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனைக் கருதி மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஜூன் 18ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஏலம் நடைபெறவுள்ளது.

ஏலத்தில் பங்கேற்கும் விவசாயிகள், பணியாளா்கள், எடை கூலி தொழிலாளா்கள் அனைவரும் தவறாமல் முகக் கவசம் அணிந்து, உரிய சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். மேலும், நோய்த் தொற்று பரவாமல் இருக்க விற்பனைக்காக 250 லாட்டுகள் மட்டுமே வழங்கப்படும்.

ADVERTISEMENT

எனவே, விவசாயிகள் 86675-43113, 86100-35718 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தங்களது பெயா், ஊா், மூட்டைகளின் எண்ணிக்கை, செல்லிடப்பேசி எண் ஆகிய விவரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்த ஒழுங்குமுறைக் கூடம் நாள்தோறும் காலை 9 முதல் மாலை 6 மணி வரையில் செயல்படும். எனவே, விவசாயிகள் பருத்தி மூட்டைகளை இரவு நேரங்களில் எடுத்து வரவேண்டாம். இந்த விற்பனைக் கூடத்துக்கு வரும் ஒவ்வொருவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT