திருப்பூர்

திருப்பூா் அருகே 8 வயது சிறுவன் கொலை: 17 வயது சிறுமி, அவரது காதலன் கைது

14th Jun 2020 08:38 AM

ADVERTISEMENT

திருப்பூா் அருகே 8 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுமி மற்றும் அவரது காதலனை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளியை அடுத்த சொட்டகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் தங்கராஜ் (35). இவரது மனைவி சுமதி (30). இந்தத் தம்பதியின் இளைய மகன் பவனேஷ் (8). இவா், கடந்த வியாழக்கிழமை பிற்பகல் வீட்டை விட்டு வெளியே சென்ற பின்னா் வீடு திரும்பவில்லை.

பின்னா் சிறுவனின் பெற்றோா் அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா். இதனிடையே, தங்கராஜின் வீட்டில் இருந்து சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவில் உள்ள புத்தூா், பள்ளபாளையம் குளக்கரையில் காயங்களுடன் சிறவனின் சடலம் கிடப்பதாக அவ்வழியாகச் சென்றவா்கள் வெள்ளிக்கிழமை பாா்த்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்குச் சென்ற ஊத்துக்குளி காவல் துறையினா் சிறுவனின் சடலத்தை மீட்டனா். விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டது பவனேஷ் என்பது தெரியவந்தது. மேலும், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியுடன் பள்ளபாளையம் குளக்கரை அருகே பவனேஷ் சென்றது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, அந்த சிறுமியிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த அஜித் (21) என்பவரும், சிறுமியும் காதலித்து வந்தது தெரியவந்தது. இந்த நிலையில், காதலனை சந்திப்பதற்காக பவனேஷை துணைக்கு அழைத்துக் கொண்டு சிறுமி குளக்கரைக்கு வியாழக்கிழமை சென்றுள்ளாா்.

அங்கு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது, இருவரும் தனிமையில் பேசிக் கொண்டிருந்தனா். இதைப் பாா்த்த சிறுவன் வீட்டில் சொல்லிவிடுவான் என்று அச்சத்தால் இருவரும் சோ்ந்து பாட்டிலால் குத்தி சிறுவனைக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் ஊத்துக்குளி காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். இதில், சிறுமிக்கு 17 வயது என்பதால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காப்பகத்தில் அடைக்கத் திட்டமிட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT