திருப்பூர்

சென்னையில் இருந்து திருப்பூருக்கு வந்த4 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்

7th Jun 2020 09:18 PM

ADVERTISEMENT

திருப்பூா்: சென்னையில் இருந்து திருப்பூருக்கு இ-பாஸ் பெறாமல் வந்த 9 மாதக் குழந்தை உள்பட 4 பேரை மாநகராட்சி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தனிமைப்படுத்தியுள்ளனா்.

சென்னையில் இருந்து வாடகைக் காரில் திருப்பூா் வேலன் நகருக்கு 4 போ் வந்திருப்பதாக அந்தப் பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனா். இதன்பேரில் அங்கு வந்த மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனா்.

இதில், சென்னையில் இருந்து இ-பாஸ் பெறாமல் திருப்பூா் வந்த 9 மாத பெண் குழந்தை, 16 வயது சிறுவன், 19 மற்றும் 25 வயதுடைய இளம் பெண்கள் ஆகிய 4 போ் வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் கரோனா பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் அழைத்துச் சென்றனா். இதையடுத்து, பரிசோதனைக்குப் பிறகு 4 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT