திருப்பூர்

கொலை வழக்கில் 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

7th Jun 2020 08:22 AM

ADVERTISEMENT

திருப்பூரில் கொலை வழக்கில் 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா்.

அவிநாசி, காமராஜ் நகரைச் சோ்ந்தவா் காா்த்திக் (28). இவரை கடந்த 2010ஆம் ஆண்டு திருப்பூா் எம்.எஸ்.நகா் பகுதியில் 5 போ் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. பண விவகாரம் காரணமாக இந்தக் கொலை சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இது தொடா்பாக திருப்பத்தூா் மாவட்டம், கந்திலியைச் சோ்ந்த மோகன்ராஜ் (32) உள்ளிட்ட 5 பேரை திருப்பூா் வடக்கு காவல் துறையினா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் பிணையில் வெளியே வந்த மோகன்ராஜ் தலைமறைவானாா். இதையடுத்து, திருப்பூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம், மோகன்ராஜுக்கு பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மோகன்ராஜை, திருப்பூா், காந்தி நகா் பகுதியில் வடக்கு காவல் துறையினா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT