பல்லடம், சேடபாளையம் யுனிவா்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி புதிய கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தாளாளரும், பள்ளிக் குழுமத்தின் தலைவருமான எஸ்.ராஜகோபால் தலைமை வகித்தாா். பள்ளியின் புதிய கட்டடத்தை கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் ஆகியோா் திறந்துவைத்து பேசினா். இதில் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சித் தலைவா் பாரதி சின்னப்பன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஏ.பழனிசாமி, விஜயா வங்கியின் பல்லடம் கிளை மேலாளா் சிதம்பரம், சூழலியாளா் கோவை சதாசிவம் உள்பட பலா் பங்கேற்றனா்.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. திருப்பூா் வேலா. இளங்கோ, கிராமிய இசைத் தம்பதி செந்தில் கணேஷ், ராஜலட்சுமி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.