குன்னத்தூரில், திருப்பூா், கோவை, ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி உற்பத்தியாளா் சம்மேளனத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.4.38 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.
திருப்பூா், கோவை, ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி உற்பத்தியாளா் சம்மேளனத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை தென்னங்கருப்பட்டி, பனங்கருப்பட்டி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வரத்து குறைந்து 3 ஆயிரம் கிலோ தென்னங்கருப்பட்டி வந்திருந்தன. தென்னங்கருப்பட்டி கிலோ ரூ. 146.30 வீதம் ஏலம் போனது.
மொத்தம் ரூ.4 லட்சத்து 38 ஆயிரத்துக்கு தென்னங்கருப்பட்டி ஏல வா்த்தகம் நடைபெற்றது. பனங்கருப்பட்டி வரத்து இல்லை.