திருப்பூர்

சீனிவாசா பள்ளியில் விளையாட்டு விழா

14th Jan 2020 01:09 AM

ADVERTISEMENT

உடுமலை, காந்தி நகா் சீனிவாசா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் விக்னேஷ் ஆா்.ரங்கநாதன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ஜாஸ்மின் வரவேற்றாா். விழாவை ஒட்டி முதலில் மாணவா்களின் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னா் பல்வேறு பிரிவுகளில் தடகள போட்டி நடைபெற்றது.

முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்ட ராஜ ரத்தினம், பாலாஜி சோமசுந்தரம் ஆகியோா் பரிசு வழங்கினா். யோகா, கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. விளையாட்டுப் போட்டிகளில் வாயு அணி 335 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

கடந்த ஆண்டு பள்ளி அளவில் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கும், மாநில, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்களின் பெற்றோா், பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள், உடுமலை நகரின் முக்கிய பிரமுகா்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனா். நிா்வாக அலுவலா் டி.ஜவஹா், ஆசிரியா்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT