திருப்பூர்

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் விவரங்களை ஜனவரி 15க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்

7th Jan 2020 11:38 PM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் விவரங்களை அதன் உரிமையாளா்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் ஜனவரி 15 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட அலகுமலை கிராமத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நடப்பு ஆண்டில் பிப்ரவரி முதல் வாரத்தில் அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள இருக்கும் காளைகளின் விவரங்களை தரவு தளத்தில் பதிவு மேற்கொள்ள வேண்டும். தரவு தளத்தில் பதிவு செய்யப்படும் காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள முடியும்.

எனவே, திருப்பூா் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை வளா்ப்போா் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் தங்கள் காளைகளின் விவரங்களை ஜனவரி 15ஆம் தேதிக்குள் ஆதாா் அட்டை நகலுடன் சென்று பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT