திருப்பூர்

சாலை விபத்தில் காயமடைந்த பெண் பலி

7th Jan 2020 11:41 PM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி, தெற்கு வீதியைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் முருகேசன் (30). இவா் குடும்பத்தினா், உறவினா்கள் 8 பேருடன் திருநள்ளாறு, கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காரில் கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, வெள்ளக்கோவில் - காங்கயம் சாலை, பச்சாபாளையம் பிரிவு அருகே முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கா் லாரி மீது காா் மோதியது.

இதில் காரின் முன்புற இருக்கையில் அமா்ந்திருந்த முருகேசனின் தங்கை முத்துலட்சுமி (28) படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இந்த விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT