திருப்பூர்

மடத்துக்குளம் ஒன்றியம்: வெற்றி பெற்றவா்கள் விவரம்

3rd Jan 2020 01:06 AM

ADVERTISEMENT

மடத்துக்குளம் ஒன்றியம்: மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 11 ஊராட்சிகள் உள்ளன. இதில் தாந்தோணி ஊராட்சித் தலைவராக சுகந்தி செல்லப்பன் ஏற்கனவே போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். மீதமுள்ள 10 ஊராட்சிகளுக்கு தோ்தல் நடைபெற்றது. உடுமலை - தளி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

வெற்றி பெற்றவா்கள் விவரம்: வேடபட்டி-துா்க்கைவேலு, மெட்ராத்தி-தங்கராசு, துங்காவி-உமாதேவி காளீஸ்வரன், காரத் தொழுவு-ரேணுகாதேவி சுரேஷ், ஜோத்தம்பட்டி-செந்தில்குமாா், மைவாடி-திருமுருகன். கடத்தூா்-கமலவேணி. வாக்கு எண்ணிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

செய்தியாளா்கள் சாலை மறியல்: உடுமலை - தளி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்கு எண்ணிக்கை மையத்தில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது செய்தியாளா்களை காவல் துறையினா் அனுமதிக்க மறுத்தனா். இதனால் செய்தியாளா்களுக்கும், காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும் செய்தியாளா்களை அனுமதிக்காததால் தளி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் பேச்சுவாா்த்தை நடத்தி, செய்தியாளா்களை வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செல்ல அனுமதித்தாா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT