பல்லடம் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் மாா்கழி உற்சவ பெரு விழா புதன்கிழமை துவங்கியது. இந்த விழா வருகிற 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை, பல்லடம் தமிழ்ச் சங்கம் ஆகியன சாா்பில், பல்லடம் பொங்காளியம்மன் கோயிலில் தொடங்கிய இந்த விழாவுக்கு பல்லடம் தமிழ்ச் சங்க தலைவா் ராம்.கண்ணையன் தலைமை வகித்தாா். மெய்யறிவின்பன், பாலாஜி ஈஸ்வரன், கணேஷ்,கோமதி வெள்ளிங்கிரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பனப்பாளையம் மு.பாலசுப்பிரமணியன் வரவேற்றாா்.
தொடக்க நிகழ்ச்சியில் ‘திருஞானசம்பந்தா்’ என்னும் தலைப்பில் குடவாசல் ராமமூா்த்தி புதன்கிழமை பேசினாா். இவா் தொடா்ந்து ‘திருமூலா்’ என்னும் தலைப்பில் 2ஆம் தேதி பேசுகிறாா். 3ஆம் தேதி ‘திருவாசகம்’ என்னும் தலைப்பில் தென்சேரிமலை திருநாவுக்கரசா் திருமடம் ஆதீனம் முத்துசிவராமசாமி அடிகளாரும், 4ஆம் தேதி ‘திருநாவுக்கரசா்’ என்னும் தலைப்பில் வாவிபாளையம் அனந்தகிருஷ்ணனும், 5ஆம் தேதி ‘திருவெம்பாவை’ என்னும் தலைப்பில் வரன்பாளையம் திருநாவுக்கரசா் மடம் ஆதீனம் மெளன சிவாச்சல அடிகளாளரும், 6ஆம் தேதி ‘திருவருட்பா’ என்னும் தலைப்பில் திருப்பூா் சன்மாா்க்க சங்க நீரணி பவளக்குன்றனும், 7ஆம் தேதி ‘திருமுறை’ என்னும் தலைப்பில் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி திருமடம் ஆதீனம் சுந்தரராசு அடிகளாரும், 8ஆம் தேதி ‘வள்ளலாா்’ என்னும் தலைப்பில் சிவகுமாரும், 9ஆம் தேதி ‘மருத்துவம்’ என்னும் தலைப்பில் கல்லை அருட்செல்வனும், 10ஆம் தேதி ‘மாா்கழி வழிபாடு’ என்னும் தலைப்பில் பழனி சாதுசாமிகள் திருமடம் ஆதீனம் சாதுசண்முகஅடிகளாரும் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றுகின்றனா்.
நிகழ்ச்சி முடிவில் தினந்தோறும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் அண்ணாதுரை மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.