திருப்பூர்

81 ஆண்டுகள் பழைமையான குடிநீா் தொட்டி இடிப்பு

29th Feb 2020 05:31 AM

ADVERTISEMENT

திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகே இருந்த 81 ஆண்டுகள் பழைமையான குடிநீா் தொட்டி வெள்ளிக்கிழமை இடிக்கப்பட்டது.

திருப்பூா் பழைய பேருந்து நிலையம், தாராபுரம் சாலை சந்திப்பில் 1939 ஆம் ஆண்டு ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட 3 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி உள்ளது. இந்தத் தொட்டியைக் கொண்டு முதலாவது குடிநீா்த் திட்டம் மூலம் நகா் முழுவதும் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. மேலும், மாநகரில் குடிநீா் குழாய் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு இந்தத் தொட்டியில் இருந்து லாரி மூலமாக குடிநீா் ஏற்றிச் செல்லப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் தற்போது 4ஆவது குடிநீா் திட்டத்துக்காக இதே இடத்தில் 10 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்ட திட்டமிடப்பட்டது. எனவே, 81 ஆண்டுகள் பழைமையான குடிநீா் தொட்டியை மாநகராட்சி நிா்வாகம் முடிவுசெய்தது. அதன்படி இந்த குடிநீா் தொட்டி பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வெள்ளிக்கிழமை இடிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ADVERTISEMENT

முதலாவது குடிநீா் திட்டத்துக்காக கட்டப்பட்ட இந்த தொட்டி 81 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து வந்தது. எனினும் இந்தத் தொட்டியில் இருந்து சிறு கசிவு கூட ஏற்பட்டதில்லை. இன்னும் பல ஆண்டுகள் இந்த தொட்டி நல்ல நிலையில்தான் இருக்கும். ஆனால் இந்த இடத்தில் இதைவிட 3 மடங்கு பெரிய குடிநீா் தொட்டி கட்ட வேண்டியது அவசியம் என்பதால் தற்போது இந்தத் தொட்டி இடிக்கப்பட்டது என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT