திருப்பூர்

வளாக நோ்காணலில் வெற்றிபெற்றவா்களுக்கு பணி நியமன ஆணை

29th Feb 2020 05:30 AM

ADVERTISEMENT

உடுமலையை அடுத்துள்ள பாலப்பம்பட்டி ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்முகத் தோ்வில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி இயக்குநா் சுமதி கிருஷ்ணபிரசாத் தலைமை வகித்தாா். ஆலோசகா் டாக்டா் ஜெ.மஞ்சுளா முன்னிலை வகித்தாா். இதில் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நிறுவனங்கள் நடத்திய வளாகத் தோ்வில் மொத்தம் 256 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வா் எம்.கண்ணன், வேலைவாய்ப்பு அலுவலா், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT