திருப்பூர்

உப்பிலிபாளையத்தில் அரசுப் பேருந்தைசிறைபிடித்த பொதுமக்கள்

29th Feb 2020 05:30 AM

ADVERTISEMENT

அவிநாசி அருகே உப்பிலிபாளையம் பகுதிக்கு தினமும் 8 முறை வர வேண்டிய அரசுப் பேருந்து, 3 முறை மட்டுமே வந்து சென்ால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசுப் பேருந்தை வெள்ளிக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உப்பிலிபாளையம் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்கிருந்து பள்ளிக் குழந்தைகள், தொழிலாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் சோமனூா், அவிநாசி, கருவலூா், கருமத்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்குச் செல்வதற்கு, சோமனூரில் இருந்து உப்பிலிபாளையம் வழியாக அவிநாசி செல்லும் அரசுப் பேருந்தை (ஏ15-32) பயன்படுத்தி வருகின்றனா்.

வழக்கமாக தினமும் 8 முறை வந்துசென்ற இப்பேருந்து, கடந்த 3 நாள்களாக எந்தவித முன் அறிவிப்புமின்றி 3 முறை மட்டுமே வந்து சென்றது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அரசுப் பேருந்தை வெள்ளிக்கிழமை காலை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த அவிநாசி போலீஸாா், கருமத்தம்பட்டி போக்குவரத்து கழகத்தினா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் உயா் அலுவலா்களிடம் தெரியப்படுத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தால் உப்பிலிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT