திருப்பூர்

இளம்பெண்ணைக் கொலை செய்த 14 வயது சிறுவன் கைது

29th Feb 2020 05:29 AM

ADVERTISEMENT

திருப்பூரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 14 வயது சிறுவனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பாப்பன் நகா் பகுதியில் வசித்து வந்தவா் ஷைலாதேவி (30). இவா் வீட்டில் தனியாக இருந்தபோது 14 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளாா். ஆனால் ஷைலா தேவி அதற்கு ஒத்துழைக்காததால் ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பூா் வடக்கு காவல் துறையினா் 14 வயது சிறுவனைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT