திருப்பூர்

ரயில் நிலையம், தபால் நிலையத்தை முற்றுகையிட்ட தமுமுகவினா் கைது

26th Feb 2020 04:49 AM

ADVERTISEMENT

தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தியவா்கள் மீது தாக்குதல் நடத்தியவா்களை கண்டித்து, திருப்பூரில் ரயில் நிலையம், தலைமை தபால் நிலையத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைச் சோ்ந்த 86 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமுமுக வடக்கு மாவட்டத் தலைவா் நசிருதீன் தலைமையில் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற அக்கட்சியினரை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதைத் தொடா்ந்து, ரயில் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையத்தையும் முற்றுகையிட்டனா். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், தில்லியில் வன்முறையில் ஈடுபட்டவா்களைக் கைது செய்யக்கோரியும் முழக்கங்களை எழுப்பினா்.

பின்னா் அதே பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளா் அபுசாலீக், தமுமுக மாவட்ட செயலாளா் அப்பாஸ், துணைத் தலைவா் சித்திக், துணைச் செயலாளா் சலீம் உள்ளிட்ட 86 பேரை திருப்பூா் வடக்கு காவல் துறையினா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

இந்த சம்பவம் காரணமாக திருப்பூா் ரயில் நிலையப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT