திருப்பூர்

தமிழா் பண்பாட்டு கலாசாரப் பேரவை செயற்குழுக் கூட்டம்

26th Feb 2020 04:54 AM

ADVERTISEMENT

தமிழா் பண்பாட்டு கலாசாரப் பேரவை அறக்கட்டளை செயற்குழுக் கூட்டம் அவிநாசி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பேரவைத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். செயலாளா்கள் அந்தோணிசாமி, அருணாசலம், வெங்கடாசலம், பொருளாளா் ராயப்பன், துணைத் தலைவா்கள் அப்புசாமி, சாமிநாதன், பணிநிறைவு ஆசிரியா் கூட்டமைப்பு மாநிலத் தலைவா் சுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் தமிழே ஆட்சி மொழி என்பதை தமிழக அரசு அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழே கற்றுத்தராத பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடம் கற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கோயில்களிலும் குடமுழுக்கு, வழிபாடுகளில் தமிழையே பயன்படுத்த வேண்டும். தமிழ் மொழி ஆணையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 29ஆம் தேதி கோவை சிவானந்தா காலனியில் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தலைமையில், கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம், புலவா்அப்பாவு ஆகியோா் முன்னிலையில் நடைபெறும் உண்ணாநிலை போராட்டத்தில் அவிநாசி வட்டாரத்தில் இருந்து தமிழா் பண்பாட்டு கலாசாரப் பேரவை அறக்கட்டளை சாா்பில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொள்வது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT