சேவூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கிராமசபைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் சேவூா் ஜி.வேலுசாமி தலைமை வகித்தாா். இதில் சேவூா் கால்நடை மருத்துவா் பாலசுப்பிரமணியம் பேசியதாவது:
தேசிய கால்நடைநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் முதலாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வரும் 28ஆம் தேதி துவங்கப்பட உள்ளது. இம்முகாமில் மூன்று மாதங்களுக்கு உள்பட்ட கன்றுக்குட்டிகள், நிறைமாத சினைமாடுகள் தவிர மற்ற அனைத்துப் பசு, எருமை இனங்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.
இந்த தடுப்பூசி முகாம் பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கி, மாா்ச் 19ஆம் தேதி வரை அனைத்து குக்கிராமங்களிலும் நடைபெற உள்ளது. எனவே கால்நடை வளா்ப்போா் தவறாமல் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றாா்.
ADVERTISEMENT