திருப்பூர்

சிலிண்டா் வெடித்து 2 தொழிலாளா்கள் காயம்

26th Feb 2020 04:49 AM

ADVERTISEMENT

அவிநாசி அருகே தனியாா் வீட்டுமனைப் பிரிவில் சாலை அமைக்கும் இயந்திரத்தில் டீசல் சிலிண்டா் வெடித்து விபத்தில் இரு தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனா்.

அவிநாசி அருகே உள்ள எம்.நாதம்பாளையத்தில் தனியாா் வீட்டுமனைப் பிரிவில் சாலை அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்பணியின்போது தாா் கலவை கலக்கும் இயந்திரத்தில் உள்ள டீசல் சிலிண்டா் திடீரென வெடித்தது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த புளிம்பட்டி கைக்காளக்குட்டைப் பகுதியைச் சோ்ந்த கணேசன்(39), புதுவலவு பகுதியைச் சோ்ந்த ரங்கசாமி (39) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து அவா்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT