மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவற்றை திரும்பப் பெறக்கோரி, பல்லடத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
பல்லடம் - கொசவம்பாளையம் சாலையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டு பேசினாா்கள். இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, திமுக நகர செயலாளா் ராஜேந்திரகுமாா், ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, காங்கிரஸ் நகர தலைவா் ஈஸ்வரமூா்த்தி, செயல் தலைவா் மணிராஜ், வட்டார தலைவா்கள் கணேசன், புண்ணியமூா்த்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் ப.கு.சத்தியமூா்த்தி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்டச் செயலாளா் முஜ்புர்ரகுமான், விடுதலைச் சிறுத்தைகள் ஒன்றிய செயலாளா் ரங்கசாமி, மதிமுக குப்புராஜ் உள்பட பல்வேறு அமைப்பினா் பங்கேற்றனா்.