திருப்பூர்

‘அம்மா’ இருசக்கர வாகனத் திட்டம்: பயனாளிகளுக்கு ஆணை

26th Feb 2020 04:50 AM

ADVERTISEMENT

காங்கயத்தில் ‘அம்மா’ இருசக்கர வாகனத் திட்டத்தில் மானியம் வழங்குவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையா் ரமேஷ் தலைமை வகித்தாா். காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா், 83 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனத் திட்டத்தில் மானியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினாா்.

இதில், ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் ஜே.ஜீவிதா ஜவஹா், மகளிா் திட்ட காங்கயம் வட்டார மேலாளா் எம்.சாந்தா, ஒன்றியக் கவுன்சிலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT