திருப்பூர்

பல்லடத்தில் குப்பைகளை அகற்ற தமாகா வலியுறுத்தல்

25th Feb 2020 04:46 AM

ADVERTISEMENT

பல்லடம் நகரில் தேங்கி உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் திருப்பூா் மாவட்ட பொருளாளா் என்.வி.ராமசாமி, பல்லடம் நகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள மனு:

பல்லடம் நகரில் கடந்த ஒரு மாதமாக குடிநீா் சரிவர விநியோகம் செய்யப்படவில்லை. 4 நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்பட்ட குடிநீா் தற்போது 10 நாள்களுக்கு ஒரு முறை விநியோகிக்கப்படுகிறது. எனவே, தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க வேண்டும்.

நகரம் முழுவதும் பல நாள்களாக குப்பைகள் அகற்றப்படாமல் தேக்கமடைந்துள்ளன. இதனால் துா்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருச்சி சாலை, மரப்பாலத்தின் மேல் ஞாயிற்றுக்கிழமைதோறும் தரையில் வைத்து, சுகாதாரமற்ற முறையில் அரசு அனுமதி இன்றி மீன் விற்பனை மாா்க்கெட் இயங்குகிறது.

ADVERTISEMENT

இதனை அகற்றி நகராட்சிக்கு வரி வருமானம் வரும் வகையில் மங்கலம் சாலை கடையை மீன் மாா்க்கெட்டாக மாற்ற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT