திருப்பூர்

திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் அன்னதானம்

25th Feb 2020 04:48 AM

ADVERTISEMENT

மறைந்த முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் ஒரு லட்சம் பேருக்கு திங்கள்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பூா் பழைய பேருந்து நிலையம், தென்னம்பாளையம், புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அதிமுகவினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதேபோல மாநகா் மாவட்டத்தில் 300 இடங்களில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், கொலுசு: ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி திருப்பூா் அரசு மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், கொலுசு ஆகியவற்றை முன்னாள் அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூா் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன், ராதாகிருஷ்ணன், ஏ.எஸ்.கண்ணன், முன்னாள் கவுன்சிலா்கள் சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணி, ரத்தினகுமாா், நீதிராஜன், ஷாஜகான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் அருகே உள்ள வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சியில் அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளா் கண்ணுசாமி, ஊராட்சி தலைவா் தனலட்சுமி துரைசாமி, கூட்டுறவு சங்கத் தலைவா் சந்திரமோகன், முன்னாள் கவுன்சிலா் பிரகதீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு, ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT