முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாள் விழாவை ஒட்டி, பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவிக்கு காங்கயம் அதிமுக ஒன்றியச் செயலா் என்.எஸ்.என்.நடராஜ் ஒரு பவுன் தங்கக் காசு பரிசாக வழங்கினாா்.
காங்கயம் பிரசன்ன வெங்கடரமணா் கோயில் முன் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சத்தியப் பிரியாவுக்கு, ஒரு பவுன் தங்கக் காசை என்.எஸ்.என்.நடராஜ் வழங்கினாா்.
பின்னா், காங்கயம் நகரில் திருப்பூா் சாலை, சென்னிமலை சாலை, தாராபுரம் சாலை, கோவை சாலை, காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பொத்தியபாளையம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் அதிமுக மாவட்ட பொருளாளா் கே.ஜி.கே.கிஷோா்குமாா், காங்கயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் துணைத் தலைவா் ஏ.பி.துரைசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.