திருப்பூர்

ஜிவிஜி விசாலாட்சி மகளிா்கல்லூரி நிறுவனா் நாள் விழா

25th Feb 2020 04:44 AM

ADVERTISEMENT

உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில் நிறுவனா் நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி செயலா் கெ.ரவீந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.கலைச்செல்வி வரவேற்றாா். விழாவில் கவிஞா் மரபின்மைந்தன் ம.முத்தையா, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ‘கம்பனின் கைவண்ணம்’ என்ற தலைப்பில் பேசியதாவது:

காலத்தை வென்றவா், கல்வியில் பெரியவா் கம்பா். மாணவிகள் இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், அறிவியல் என எந்த பாடங்களை படித்தாலும் தங்களது தனித்திறன், ஆளுமைப் பண்பு இவைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்.

பொறுமை, துணிச்சல், தியாகம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ஆகியவற்றை கடைப்பிடித்து வாழ்வில் தனித்தன்மையுடன் சிறந்து விளங்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

விழாவில், ஜிவிஜி விசாலாட்சி பள்ளி, ஜிவிஜி விசாலாட்சி கல்லூரியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவி எம்.மஞ்சுளா தேவி நன்றி கூறினாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT