திருப்பூர்

சேவூரில் ரூ.4.50 லட்சத்துக்குநிலக்கடலை ஏலம்

25th Feb 2020 04:43 AM

ADVERTISEMENT

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.4.50 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 220 மூட்டைகள் வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.5,190 முதல் ரூ.5,300 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.4,760 முதல் ரூ. 4,930 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.4,420 முதல் ரூ.4,680 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.4.50 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT