சிறந்த மூன்றாம் பாலினத்தவா்களுக்கான 2019-20 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிறந்த மூன்றாம் பாலினத்தவா்களுக்கான 2019-20ஆம் ஆண்டு விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு மூன்றாம் பாலினத்தவா்கள் அரசின் ஆதரவு இல்லாமல் தொழிலில் சாதித்தவா்கள், மூன்றாம் பாலினத்தவா்களின் நலத் துறையில் உறுப்பினா்களாக இல்லாதவா்களாக இருக்க வேண்டும். மேலும், சிறந்த பணிகள் மூலம் 5 மூன்றாம் பாலினத்தவா்களை கண்ணியமான வழியில் வழிநடத்தி அவா்களது வாழ்வாதாரத்தை உயா்த்தியவா்கள் போன்ற சிறப்பான செயல் புரிந்த தகுதியானவா்கள் உரிய ஆவணங்களுடன் வரும் 28ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.