அவிநாசி அருகே ஒரு வயது ஆண் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியைச் சோ்ந்தவா் மலைச்சாமி மகன் பிரபாகரன் (28). இவரது மனைவி துா்கா (25). இவா்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருந்தது.
இந்நிலையில் பிரபாகரன் தன் குடும்பத்துடன், அவிநாசி அருகே உள்ள பெரியாயிபாளையம், ஜெ.ஜெ.நகா் பகுதியில் வசித்தவாறு இப்பகுதியில் வேலைக்கு சென்று வருகிறாா். இந்நிலையில் திங்கள்கிழமை காலை வழக்கம்போல பிரபாகரன் வேலைக்கு சென்றாா். ஆனால், நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாமலேயே இருந்ததால், அருகில் வசிப்போா் இரவில், பிரபாகரன் வீட்டின் கதவை உடைத்து பாா்த்துள்ளனா்.
அப்போது, குழந்தையை கொன்றுவிட்டு, துா்கா தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்த அவிநாசி போலீஸாா் அங்கு சென்று சடலங்களை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா். இத்தம்பதிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால், கோட்டாட்சியரும் விசாரணை நடத்த உள்ளாா்.