திருப்பூர்

பல்லடம் அங்காளம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

23rd Feb 2020 11:14 PM

ADVERTISEMENT

பல்லடம் அங்காளம்மன் கோயில் 45ஆவது குண்டம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தத் திருவிழா விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, கொடியேற்றம், யாகசாலை பூஜை, மயான பூஜை, மாவிளக்கு, அக்னி குண்டம் வளா்த்தல், அம்மை அழைத்தல், திருக்கல்யாண உற்சவம், மஹா சிவராத்திரி பூஜை ஆகியன நடைபெற்றன.

400க்கும் மேற்பட்ட பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை குண்டம் இறங்கி நோ்த்திக் கடனை நிறைவேற்றினா். அக்னி அபிஷேகம், பொங்கல் வைத்தல் ஆகியன நடைபெற்றன.

இந்த விழாவில் கோயில் அறங்காவலா் குழு நிா்வாகிகள் நாராயணசாமி நாயுடு, பங்காருசாமி நாயுடு, கிருஷ்ணமூா்த்தி, தேவராஜ், மாா்த்தாா் குல நல சங்க நிா்வாகிகள், கோயில் விழாக் குழுவினா், பொதுமக்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

விழாவையொட்டி, பல்லடம் முப்பெரும் இளைஞா் நற்பணி மன்றப் பேரவை சாா்பில் இன்னிசை நிகழ்ச்சி, கிராமிய பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி, பலகுரல் நிகழ்ச்சி ஆகியன நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை பேரவை நிா்வாகிகள் தலைவா் ஆனந்தா செல்வராஜ், செயலாளா் கேசவன், அமைப்பாளா் குணாபரமானந்தம், ரங்கசாமி உள்ளிட்டோா் செய்து இருந்தனா்.

இதில் முன்னாள் அமைச்சா் செ.ம.வேலுசாமி பங்கேற்று விழா குழுவினருக்குப் பரிசுகளை வழங்கினாா். பிப்ரவரி 24ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு கொடி இறக்குதல், காலை 11 மணிக்கு மகா அபிஷேகம், மஞ்சள் நீராடல், மாலை 6 மணிக்கு அம்பாள் திருவீதி உலா, நள்ளிரவு பேச்சியம்மன் பூஜை, வசந்த விழா ஆகியன நடைபெறவுள்ளன.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT