காங்கயம் அருகே ஆலாம்பாடி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள மின் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்ரவரி 24) காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய காங்கயம் கோட்ட செயற்பொறியாளா் எம்.மருதாசலமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: வேலாயுதம்பாளையம், நால்ரோடு, மறவபாளையம், சாவடி, பூமாண்டன்வலசு, நத்தக்காட்டுவலசு, பரஞ்சோ்வழி, ஆலாம்பாடி, கல்லேரி, நெய்காரன்பாளையம்.