சேவூா் அருகே இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
சேவூா் அருகே கருமாபாளையம் பாரதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் சின்னான் மகன் பண்டா(எ) காா்த்தி (20). இவா் இருசக்கர வாகனத்தில் சேவூரில் இருந்து கருமாபாளையம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
கருமாபாளையம் அருகே சென்ற போது, அவிநாசியில் இருந்து சேவூா் நோக்கி வந்த சரக்கு ஆட்டோ, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த காா்த்தி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இது குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.