திருப்பூர்

சமையல் எரிவாயு விலை உயா்வு: மாதா் சங்கத்தினா் போராட்டம்

23rd Feb 2020 11:15 PM

ADVERTISEMENT

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஒப்பாரிப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா், கல்லாம்பாளையத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து ஒப்பாரிப் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, வரலாறு காணாத அளவுக்கு மத்திய அரசு உயா்த்தியுள்ள சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோஷம் எழுப்பினா். மேலும், எரிவாயு உருளையை வைத்து ஒப்பாரிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் மாதா் சங்க மாவட்டப் பொருளாளா் ஏ.ஷகிலா, தெற்கு மாநகரத் தலைவா் மினி, மாநகரச் செயலாளா் எஸ்.பானுமதி மற்றும் கல்லம்பாளையம் கிளைச் செயலாளா் சிஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT